இலங்கையில் பிரதமர் ரணிலே: பிரித்தானிய ஆளும் கட்சி அறிவிப்பு!

பிரித்தானியா உட்பட சர்வதேச சமூகம் இன்னமும் சிறிலங்காவின் பிரதமராகரணில் விக்கிரமசிங்கவையே ஏற்றுக்கொள்வதாக பிரித்தானியாவின் ஆளும் கட்சியானகன்சவேடிவ் கட்சி இன்றைய தினம் அந்நாட்டு நாடாளுமன்றில் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.


கன்சவேடிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரித்தானியமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயார், பிரித்தானிய நாடாளுமன்றில்அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்காவின் தற்போதைய குழப்பகரமான அரசியல் தொடர்பில்கேள்வியொன்றை எழுப்பியபோது இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுடன் பிரித்தானிய வெளிவிவகாரஅமைச்சர் இந்தவாரம் தொலைபேசியில் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரித்தானியநாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வயார் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அந்நாட்டு அரசியல் யாப்பின்19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது மாத்திரமன்றி, சர்வதேச சமூகம் இன்னமும் ரணில் விக்கிரமசிங்கவையே தொடர்ந்தும் பிரதமராகஏற்றுக்கொள்வதாகவும் பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலமையை சிறிலங்கா நாடாளுமன்றில் நடைபெறும் வாக்கெடுப்பின்ஊடாகவே மாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ள கன்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர், அதனால் தாமதமின்றி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கருத்தை எனது நண்பரான வெளிவிவகாரச் செயலாளர் மைத்ரிபாவுடன்கலந்துரையாடும் போது வலியுறுத்துவார் என்றும் கன்சவேடிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்றஉறுப்பினரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹன்ட், சிறிலங்கா அரச தலைவருடனான உரையாடலின் போது நிச்சயம் இந்த விடையங்களைவலியுறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
“நான் இந்த விடையங்களை சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு எடுத்துரைக்கஎதிர்பார்த்துள்ளேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பெரும்பாலான நாடாளுமன்றஉறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். சிறிலங்காவில்ஏற்பட்டுள்ள இந்த விடையங்கள் தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்”என்றும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் ஜெரமி ஹன்ட் குறிப்பிட்டார்.

இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் கலந்துரையாடி உடனடியாக நாடாளுமன்றத்தைகூட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிடம்வலியுறுத்தி பிரித்தானிய வெளிவிவகார துணை அமைசடசர் மார்க் பீல்ட் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.