“தமிழினத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு தமிழ்த்தேசியமே மாற்றுத் திட்டம்!

தமிழினத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு தமிழ்த்தேசியமே மாற்றுத் திட்டம்!” என வட அமெரிக்காவில் நடைபெற்ற “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” கருத்தரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெமணியரசன் பேசினார்.

வட அமெரிக்கத் தமிழர்கள்” அமைப்பின் சார்பில் வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” தலைப்பிலானதொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும்வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் “இலங்கை தமிழ்ச் சங்கத்தின்” 41ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காகவும்தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெமணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்வாசிங்டன்செயின்ட் லூயிஸ்,மின்னாபோலிஸ்நேவார்க்சைரக்கஸ்நியூஜெர்சிவட கரோலினாஅட்லாண்டாசியாட்டில்டல்லஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றுகிறார்.

கடந்த 2018 அக்டோபர் 26ஆம் நாள்வட அமெரிக்காவின் மிசோரி - செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” - தொடர்கூட்டங்களின் முதல் நிகழ்வாக, “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவீரபாண்டியன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்நிகழ்வின் தொடக்கமாகஐயா பெமணியரசன் அவர்கள் குறித்த குறும்படம் ஒளிபரப்பானதுஇதனை யடுத்துஐயாபெமணியரசன் கருத்துரையாற்றினார்அவர் பேசியதன் சுருக்கம் :

வட அமெரிக்கத் தமிழ் மக்களோடு கலந்துரையாடும் வகையில்எனக்கு இக்கூட்டங்களில் பங்கெடுக்க வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட அமெரிக்காவின் இந்த பால்வின் நகரத்தில் - இந்த குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் திரண் டிருக்கும் தமிழ் உள்ளங்களுக்கு எனது வாழ்த்துகள்!

கடந்த காலங்களைவிட தமிழின உணர்வுதமிழின உரிமை உணர்ச்சி தமிழ்நாட்டிலும் அதிகமாகியுள்ளதுதமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும்அதிகமாகியுள்ளது.

புலத்தில்இந்த உரிமை உணர்வு இன்னும் கூடுதலாக இருக்கிறது என்றும் சொல்லலாம்அதற்குக் காரணம்நம் தமிழரிடையே உள்ள தாயகப் பற்றுதாய்மொழிப்பற்றுஉரிமை குறித்த கூடுதலான அக்கறை ஒருபக்கம்அதுவும்அயல் நாட்டில் வாழும் போதுஅவர்கள் தங்கள் இனப்பெருமிதங்களையும்தங்கள் மொழிப் பெருமைகளையும் கூறும்போதுநம் மனம் நம் தாயகத்தின் பெருமிதங்களைத் நாடிச் செல்லும்நம் தாய்மொழியின் மீதும்தமிழர் தாயகத்தின் மீதும் கூடுதல் அக்கறைசெலுத்த உளவியல் வழி ஏற்படுத்தும்!

இன்றைக்குதமிழ்நாட்டு மக்கள் கடந்த காலங்களை விட அதிகளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர்ஆட்டு மந்தைமாட்டு மந்தை போல கட்சிகள் - நம் மக்களை ஓட்டுமந்தையாகக் கருதிய காலம் கடந்துவிட்டதுகட்சிகளைத் தாண்டிஉயிர் துடிப்புள்ள போராட்டங் களை தமிழ்நாட்டு மக்கள் அங்கே நடத்திக் கொண் டுள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டு உரிமையான ஏறுதழுவல் உரிமை பறிக்கப்பட்டபோதுதமிழ்நாட்டின் மிகப் பெரும் கட்சிகளாக விளங்கும் தி.மு.. - .தி.மு.கட்சிகளின்தலைவர்களால் அதை மீட்டுக் கொடுக்க முடியவில்லைஅவர்களது முயற்சிகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லைஇந்திய அரசும்உச்ச நீதிமன்றமும் அவர்களதுகுரலுக்கு செவி சாய்க்கவில்லை!

ஆனால்இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் சல்லிக்கட்டு சட்டம் வந்தால்தான் களைவோம் என்ற உறுதியோடுசென்னை கடற்கரையில் இலட்சக் கணக்கில்கூடினார்கள்தமிழ்நாடெங்கும் பல்லாயிரக் கணக்கில் கூடினார்கள்சல்லிக்கட்டு விளையாட்டு நடை பெறாத கோவையில்கூட பல்லாயிரக்கணக்கில் கூடினார்கள்.அவர்களை இணைத்தது தமிழின உணர்ச்சி!

ஏறுதழுவல் எழுச்சியைஎந்தக் கட்சியும் பின்னணி யிலிருந்து நடத்தவில்லைதன்னெழுச்சியாக அது நடந் ததுகாலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தமிழினத்தின்எழுச்சியாக அது அமைந்ததுகட்சிகள்பின்னால் வந்து இதை ஆதரித்தன.

காவிரிப்படுகையின் நெடுவாசலில் - கதிராமங் கலத்தில் .என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டம் அப்படித் தான் தன்னெழுச்சியாக நடக்கிறதுஅதைபிற கட்சிகள்பின்னால் வந்து ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளதுகதிராமங்கலத்திற்கு நாங்கள் போனபோதுஎங்களைக் காவல்துறையினர் கைது செய்தார்கள்.

அப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில்எந்தக் கட்சிப் பின்னணியும் இல்லாமல்மக்கள் ஆண்களும்பெண்களுமாக ஐம்பதாயிரம் பேர்தன்னெழுச்சியாக ஒன்றுகூடிப் போராடினார்கள்துப்பாக்கிச்சூடு நடைபெற்று, 13 மனித உயிர்களை பலிவாங்கியது தமிழ்நாடு அரசுதுப்பாக்கிச் சூடு நடந்த மறுநாளேமே 23 அன்றுநாங்கள் தூத்துக்குடி சென்றோம்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவி ஸ்னோலின் வீட்டிற்குச் சென்றோம்ஸ்னோலினின் அம்மாபெரியம்மா போன்றோர் கதறிக் கொண்டுஓய்வின்றி அழுதுகொண்டிருந்தனர்தமிழ்நாடே உங்கள் மகளுக்காக அழுது கொண்டிருக்கிறது என்றுகூறி அவரை நாங்கள் தோற்ற முயன்றோம்முடியவில்லைஅந்த சூழலிலும்கூட,ஆலையை நிரந்தரமாக மூடாமல் எங்கள் பாசமிகுப் பிள்ளையின் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என ஸ்னோலின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்அந்த வீரஉணர்ச்சிதான்தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள மாற்றம்!

கட்சிகளால் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்பதை உணர்ந்துமக்கள் தாங்களாகவே களத்தில் இறங்கிப் போராடும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. 2009ஆம் ஆண்டுதமிழீழ இன அழிப்புப் போருக்குப் பிறகுதமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் இது!

பழைய காலத்தில்கிழக்கிந்தியக் கம்பெனிகள் நம் மண்ணை சூறையாடியதைப் போல்இன்றைக்கு வடக்கிந்தியக் கம்பெனிகள் வேட்டையாடிக் கொண் டிருக்கின்றன.மண்ணை மீட்கப் போராடிய வேலு நாச்சியார்புலித்தேவன்மருது சகோதரர்களை எப்படி அழித்தார்களோஅதைப் போல போராடும் தமிழ் மக்களை காவல்துறைகொண்டு ஒடுக்குகிறார்கள்நம் காவல்துறையே அவர்களுக்கு இராபர்ட் கிளைவ் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறதுதில்லியில் “சனநாயக” முறைப்படிஅமைக்கப்பட்ட “வைசிராய்களை வைத்துநம்மை ஒடுக்குகிறார்கள்கிழக்கிந்தியக் கம்பெனியைவிட மோசமாக வடக்கிந்தியக் கம்பெனிகளால் - இந்திய அரசால்தமிழ்நாடு சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது ஐட்ரோகார்பன் எடுப்பதற்காக தமிழ் நாட்டின் காவிரிப்படுகையையும்கடற்கரையையும் ஏலம் விட்டுவிட்டார்கள்பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை 3 வட்டாரங்களாகப் பிரித்துஅதில் இரண்டை ஸ்டெர்லைட் “வேதாந்தாவுக்கும்இன்னொன்றை.என்.ஜி.சி.க்கும் கொடுத்திருக்கிறார்கள்.

இனிப்பு கடை” என்றால் எல்லா வகை இனிப்புகளும் இருப்பதுபோல், “ஐட்ரோ கார்பன்” என்று பொதுப் பெயர் வைத்து எல்லாவற்றையும் எடுக்கிறார்கள்மீத்தேன்என்றால் எதிர்ப்பு வரும் என்பதால், “ஐட்ரோ கார்பன்” என்ற பொதுப் பெயர் வைக்கப்பட்டுபெட்ரோலியம் - மீத்தேன் என அவர்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்நம்முடைய பாசன நிலங்கள் பாழ்பட்டுப் போகும் நிலை வரப்போகிறது!

இந்திய அரசமைப்புச் சட்டப்படி “நிலம்” என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதுஆனால்அதைப் பற்றியெல்லாம் இந்திய அரசு கவலை கொண்டதாகவேதெரிகிறதுஅதைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழ்நாடு அரசுக்கும் இல்லை!

இவற்றையெல்லாம் எதிர்த்துக் கூடுவதையே சட்டவிரோதம் என்கிறது தமிழ்நாடு அரசுஎட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பக்கத்து வீடு பாதிக்கப்பட்டால்நாம்அவர்களுக்கு ஆதரவாக நின்றால் கூட நம்மை “வெளியாள்” என்று தனிப்பிரித்துகைது செய்கிறது தமிழ்நாடு காவல்துறைபக்கத்து வீட்டுக்காரனுக்கு நாங்கள்வெளியாள்” என்றால்எங்கள் மண்ணில் வந்து கால் பதிக்கும் நீங்கள் யார்காவல்துறை யார்வேதாந்தா யார்இந்திய அரசு யார்?

இப்படி நம் மண்ணில் நாசகரத் திட்டங்கள் வந்து கொண்டுள்ள நிலையில்தமிழர் தாயகமே வெளி மாநிலத்தவரால் பறிபோய்க் கொண்டுள்ளதுதமிழ் நாட்டின் எல்லாஇடங்களிலும் வெளியார் குவிந்து கிடக்கிறார்கள்தேங்காய் பறிப்பிலிருந்து வயல்வெளி வேலைகள் தொடங்கிஅனைத்து வேலைகளிலும் வெளி மாநிலத்தவர்தான்இருக்கின்றனர்தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை!

இந்தியாவின் பிற மாநிலங்களில் இவ்வாறான நிலை இல்லைமண்ணின் மக்களுக்கே வேலை என அங்கெல்லாம் தனிச் சட்டங்கள் இயற்சி வைத்துள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல விசாவுக்கு நிகராக - உள் அனுமதிச் சீட்டுமுறை வைத்துள்ளார்கள்ஆனால்தமிழ்நாட்டில் என்ன சட்டம் இருக்கிறது தெரியுமா?

கடந்த 2016 செப்டம்பரில் அன்றைய முதலமைச்சர் செயலலிதா இருந்தபோதுநிதியமைச்சர் பன்னீர் செல்வம் ஒரு சட்டத்தை முன்மொழிந்தார்தமிழ்நாடு அரசின்பணிகளுக்கு இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் வரலாம்பிற மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான்நேப்பாளம்டான்சானியா போன்ற பிற நாட்டவரும் வரலாம்என்றொரு சட்டத்தை நிறைவேற்றினார்கள்

இப்படி அயலாரை கணக்கில்லாமல் விட்டதால்தான்அசாமிலும்திரிபுராவிலும் மண்ணின் மக்கள் சிறுபான் மையினராகிவிட்டார்கள்அதற்காகத்தான்இப்போதுஅசாமில் மண்ணின் மக்கள் யார்வெளியார் யார் என்பதற்கான “குடிமக்கள் கணக்கெடுப்பு” நடத்தப் பட்டுஅதில் 40 இலட்சம் பேர் அயலார் என்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅசாமின் பா..முதல்வர் அந்த 40 இலட்சம் பேருக்கு எவ்வித உரிமைகளையும் வழங்க முடியாதுரேசன் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கானதேவைகளை மட்டும்தான் செய்ய முடியும் என்கிறார்.

ஆனால்தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் உண்டாதி.மு.. - .தி.மு..வில் இப்படிப் பேசும் தலைவர்கள் உண்டாஅடைந்தால் திராவிட நாடு என்றுபேசியவர்கள்ஏன் மண்ணின் மக்களுக்கு வேலை என்று சட்டம் இயற்றிஅதை உறுதி செய்யவில்லை?

தி.மு..வும்.தி.மு..வும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டுதனிநபர் பகை அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான்தமிழ்நாட்டின்உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன.

தமிழ் மக்களின் உளவியல்தற்சார்பு உணர்வுதன்மான உணர்வு ஆகியவை இக்கட்சிகளால் சீரழிக்கப்பட்டுள்ளனஅதனால்தான்நம் மக்கள் ஆங்கில மோகத்திலும்,இந்தி மோத்திலும் வீழ்ந்து கிடக்கிறார்கள்இன்றைக்குதமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்குபல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.வீதிக்கு வீதி புதிதாக - இந்திய அரசின் நடுவண் கல்வி வாரியப் (சி.பி.எஸ்..) பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றனஇங்கே வட அமெரிக்கா வில் அப்படி செய்யமுடியுமா?

அமெரிக்காவில் இங்குள்ள மாகாணப் பாடத் திட்டத்தை மீறி நாம் ஏதாவது செய்திட முடியுமாபெரிய ஏகாதிபத்தியமாக விளங்கினாலும்இப்படி கீழே அதிகாரத்தைக்கொடுத்து வைத்திருக்கிறார்கள் அல்லவாஇதைத்தான் நாம் கேட்கிறோம்!

உலகத்திலேயே கூட்டாட்சி குறித்து சிறப்பாகப் பேசப்பட்ட நாடு அமெரிக்காதான்அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்கும்போது ஹாமில்டன்பெஞ்சமின்பிராங்களின்தாமஸ் ஜெபர்சன் போன்ற அறிஞர்கள் அங்கிருந்தனர்ஒரு தேசிய இனம் தனக்கான  சொந்த அரசு அமைத்துக் கொள்ளும் தன்னுரிமை (Right to Self Determinationஎன்பதைக்  கொள்கையளவில் முதன் முதலாக இங்குதான் பேசினார்கள்பல அறிவாளர்கள் இங்கே இருந்தனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள்” உருவாவதற்கு முன்பேஇங்கிலாந்திலே 15ஆம் நூற்றாண்டு வாக்கில்ஆங்கிலேயர்ஸ்காட்லாந்தியர்வேல்ஸ் மற்றும் அயர்லாந்துஇனத்தவர் ஆகியோரால் ஒரு கூட்டாட்சி உருவாகிஅதற்குப் பல்வேறு பெயர்களை சூட்டினர்கடைசியாக சூட்டப்பட்ட பெயர்தான் “ஐக்கிய இராச்சியம்” (யுனைடெட்கிங்டம்). அதுபோல்இங்கு “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா)! அதாவதுநாட்டின் பெயரில் எந்த இனத்தின் பெயரும்வந்துவிடக்கூடாது என்ற பொது சிந்தனை இங்கிருந்தது.

இதை வைத்துதான் இரசியாவில் இலெனின், “சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்” (யூனியன் ஆப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக்ஸ்என்று பெயரிட்டார்.இந்தியாவிலும் அரசமைப்புச் சட்டத்தில் “அரசுகளின் ஒன்றியம்” (Union of Statesஎன்று இந்தியாவைக் குறிப்பிட்டனர்இப்போதுஅவற்றையெல்லாம் காலி செய்துஒற்றையாதிக்கத் திணிப்பு நடந்து கொண்டி ருக்கிறது.

நம்முடைய வளமான தமிழர் மரபைக் கொண்டுஇதை நாம் எதிர்க்க வேண்டும்நமக்கு சங்க காலத்திற்கு முன்பிருந்தே “தேசம்”- “தேசியம்” குறித்த சிந்தனைகள்இருந்தனதமிழ்நாடுதமிழகம் என்பது சேரசோழபாண்டியர் காலத்திலேயே நம் இலக்கியங்களில் குறிப் பிடப்பட்டுள்ளதுமொழியை வைத்து தேசத்தை அடையாளம் காணும் சிந்தனை முறை இங்கிருந்தது.

எனவேநமது மண்ணுரிமையைக் காக்க நாம் புதிய விழிப்புணர்வைப் பெற்றாக வேண்டும்அரசியல்பொருளியல்பண்பாடுஅறம் என அனைத்திலும் ஒரு மாற்றுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு - தமிழ்த் தேசியமே அந்த மாற்றுத் திட்டம்அது குறித்த சிந்தனைகளை நாம்மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு தோழர் பெமணியரசன் பேசினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.