சுக­போக வாழ்க்­கைக்­காக அர­சி­யல் சலு­கை­களை அனு­ப­வித்த கூட்­ட­மைப்பு -கருணா!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் சாணக்­கி­ய­மான அர­சி­யல்­வாதி எனப் பல­ரா­லும் கூறப்­பட்­டா­லும் கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மேற்­கொண்ட நட­வ­டிக்கை போன்று முட்­டாள்­த­ன­மான நட­வ­டிக்­கையை எவ­ரும் முன்­னெ­டுக்க மாட்­டார்­கள். இவ்­வாறு கருணா அம்­மான் என்று அழைக்­கப்­ப­டும் விநா­ய­க­ மூர்த்தி முர­ளி­த­ரன் தெரி­வித்­துள்­ளார்.


அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;
கூட்­ட­மைப்­பி­னர் உண்­மை­யில் மக்­க­ளுக்­கா­கச் செயற்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்­தால் அவர்­கள் தமது பத­வி­க­ளை­யும் சலு­கை­க­ளை­யும் மக்­க­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டும். அதை­வி­டுத்து தமது சுக­போக வாழ்க்­கைக்­காக அர­சி­யல் சலு­கை­களை அனு­ப­வித்த கூட்­ட­மைப்பை மக்­கள் அறிந்து கொள்ள வேண்­டும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நாட்டை முன்­னேற்­று­வ­தற்­குப் பல வாய்ப்­பு­கள் இருந்­தும் அவற்­றை­யெல்­லாம் நழுவ விட்டு மகிந்த குடும்­பத்­தைப் பழி­வாங்க வேண்­டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தார். இதற்கு கூட்­ட­மைப்­பி­ன­ரும் உடந்­தை­யாக இருந்­த­னர். இவர்­க­ளது ஆட்­சி­யில் தமிழ் மக்­கள் பெற்­றுக்­கொண்ட ஒரு விட­யத்­தை­யா­வது இவர்­க­ளால் பெரு­மை­யா­கக் கூற­மு­டியுமா?

வட மாகா­ண­ச­பை­யைக் கூட இவர்­க­ளால் ஒற்­று­மை­யு­டன் திற­மை­யாக நடத்த முடி­ய­வில்லை. இவர்­க­ளது ஆட்­சி­யில் மத்­திய வங்­கிக் கொள்ளை, விலை­வாசி உயர்வு போன்ற பல விட­யங்­கள் நாட்­டைப் பாதா­ளத்­துக்­குக் கொண்டு சென்­றுள்­ளன.
தற்­போது நாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. அனைத்து சிறு­பான்­மைக் கட்­சி­க­ளும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்க வேண்­டும் – –என்­றார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Karuna  #sampanthan
Powered by Blogger.