ஆச்சி மாற்றமும் மாவை ஐயாவும்!

நிருபர் கோகிலதாஸ்
கடந்த நாட்களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தமிழ் தலைவர்களின் பொய்த்திரைகளை கிளித்து இருக்கின்றது என சொல்லலாம்.


தமிழரசு கச்சியின் தலைவர் மாவை ஐயா அவர்களின் ஊடக சந்திப்பு நடைபெற்றபோது அவர்ரின் உணர்வும், தேசிய கோட்பாடும்,தமிழ் மக்கள் மீது தமிழ் தலைவர்கள் கொண்டுள்ள பற்றும் எவ்வாறு உள்ளது என்பதனை கோடிட்டு காட்டுகின்றது. காரணம் அவர் வழங்கிய நேர்காணலில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ் நிலையில் நாம் எந்த முடிவும் எடுக்க முடியாது இந்துயா அரசுடன் பேசியே முடிவுகள் எடுக்கப்படு என அவர் கூறியிருந்தார்.

இங்கே நாம் அவதானிக்க வேண்டியது பல விடையங்கள்  பல கோணங்களில் பாற்கலாம்.
ஓன்று இலங்கை தமிழர்கள் மீது இவர்கள் வைத்துள்ள பற்றும், பாசமும், வட.கிழக்கு இணைந்த ஒரு சமாஸ்ரி முறையிலான தீர்வு?? என இவர்களின் தமிழ் தேசிய வீர விளையாடடு பேச்சு தங்கள் சுயபோக வாழ்க்கைக்கு தமிழர்களை அடிமையாக்கவே இது வரை காலஙகளும கையாண்ட ஒருவகை குள்ள நரி அரசியல் என்றால் மிகையாகாது.

இரண்டு. ஈழத் தமிழர்களுக்கு முடிவு எடுக்க வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏன்?? தனது மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்?? ஈழத் தமிவர்கள் என்ன இந்தியாவின் அடிமைகளா?? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் அடியையாகி விட்டதன் காரணம் என்ன??.

மூன்று. கூட்டமைப்பில் அரசியல் செலுத்தும் தலமைகள் இந்தியாவின் அடிமைகள் என்பதற்காகவா?? அவர்களிடம் அனுமதி பெற்று ஈழத்து உறவுகளை இன்னும் இலங்கை பேரினவாதத்திற்கு அடிமைப்படுத்தி தங்களின் வீர கோசங்களை நம்பி அரசியல் உணர்வுடன் செயற்பட்ட உன்மையானவர்கள் புதை குளிக்குள்ளும். சிறைகளிலும்.காணமல் செய்யப்பட்டும். நிற்கெதியாக்கி தமிழர்களின் இரத்தத்தத்திலும். கண்ணீரிலும் தமிழர்கள் தத்தெளிப்பதற்கு முதல் சூத்திரதாரிகள் தமிழ் கூட்டமைப்பே??.

நான்கு. கடந்த வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயாவை கொண்டு வந்து களம் இறக்கி அவரை விட தகுதி உடைய ஒருவர் எடுக்க இயலாது இந்த பதவிக்கு ஆகையால் அவரை நாங்கள் தீர்மானித்தோம் என கூறியவன்கள் இன்று அவர் அ.ஆ. கற்று வருகின்றா அவர் எம்மை ஒளிப்பதற்கு மிகுந்த தீவிரம் காட்டுகின்றார் என கூச்சலிடும் T.N.A. உறுப்பினர்களின் கூற்று தங்களைப்போன்று இந்தியாவிடம் தமிழர்களை  அடகு வைக்க முதல்வர் விரும்பவில்லை என்பதனை வலியுறுத்துகின்றது.

ஐந்து. ஈழ விடுதலை போராட்டம் முடிவுற்ற பின் பலரது வாய்களில் உச்சரித்த வார்த்தைகள் பலர் துரோகி என ஆனால் கூடவே இருந்து முதுகில் குத்திய இந்த T.N.A. துரோகிகள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்கள்?? எனும் நிலையினை மகிந்த ஐயா பதவிக்கு வந்தபின் T.N.A ஈழத்து தமிழ் மக்கள் மீது எவ்வாறு உரிமையுடன் இதுவரை அரசியல் செய்து இருக்கிறார்கள் என்பதனை நன்கு சிந்திக்க வைக்கின்றது.

ஆறு. ஈழத்து தமிழர்கள் இனிவரும் காலங்களில் சிந்தித்து செயற்படைம் காலம் நெரிங்கி விட்டது. தமிழர்களை விற்று தமிழர்களை அடிமைப்படுத்த நினைக்கின்ற T.N.A அரசியலை விட சிங்கள கச்சிகள் மேல். காரணம் எப்பவும் தமிழர்களுக்கான எந்த தீர்வினையும் தரமாட்டோம் என்று ஆச்சிக்கு ஆச்சி மாறுகின்ற போது தெளிவாக கூறி வருகின்றனர்.  எவையும் தமிழர்களுக்கு கிடைக்கபோவதில்லை என அறிந்தும் தமிழர்களை தேர்தல் காலங்களில் காலைபிடித்து கபடி ஆடும் வயது முதிந்து பதவி மோகத்தில் வாழும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுட காலம் தமிழ் மக்களுக்கு கனிந்து இருக்கின்றது ஒரு புதிய தலமையினை உருவாக்குவரு ஒவ்வரு தமழரின் வருங்கால வாக்கு தெரிவிலே அமைய போகின்றது...!

சம்பந்தன் ஐயாவின் கருத்துக்களுடன் தொடரும். சுட்டிக்காட்டல்
தமிழ் அருள் ஆசிரியர் பீடம்
Powered by Blogger.