வசந்த சேன­நா­யக்க ஏமாற்றி விட்­டார் சஜித் அதிர்ச்சி!

மகிந்த ராஜ­பக்ச அர­சில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்த வசந்த சேன­நா­யக்க அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றுக் கொண்­டது குறித்து, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தாச அதிர்ச்சி வெளி­யிட்­டுள்­ளார்.


இது­கு­றித்து தாம் ஏமாற்­றம் அடைந்­துள்­ள­தாக அவர் ஊட­கங்­க­ளி­டம் கருத்து வெளி­யிட்­டார்.

அலரி மாளி­கைக்கு கடந்த ஞாயிற்­றுக் கிழமை சென்று ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்த வசந்த சேன­நா­யக்க, தாம், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலைமை அமைச்­ச­ருக்கு மாத்­தி­ரமே ஆத­ரவு அளிப்­பேன் என்று கூறி­யி­ருந்­தார்.

முன்­ன­தாக அவர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். எனி­னும் சஜித் பிரே­ம­தாச அவரை, சமா­தா­னப்­ப­டுத்தி, அலரி மாளி­கைக்கு அழைத்து வந்­தி­ருந்­தார்.

இந்­த­நி­லை­யில் அவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அமைச்­ச­ர­வை­யில், சுற்­றுலா மற்­றும் வன­வாழ் உயி­ரி­னங்­கள் அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றுள்­ளார்.

No comments

Powered by Blogger.