அமித் வீரசிங்கவின் பிணை உத்தரவு !

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று(31) தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி , ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் மற்றும் 25,000 ரூபாய் ரொக்க பிணையிலும் விடுவிக்குமாறும்,
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசன் மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னர் , கண்டி மேல்நீதிமன்றம் கடந்த தினம் இவர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.

குறித்த சந்தேகநபர்கள் கண்டி குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.