இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் !

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக வெனிஸில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிஸ் நகரம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#Tamilnews  #Tamil  #Italiy #Venisil #Tamilarul.net #Eropa  #Rom #Jenova #Mesinavil

No comments

Powered by Blogger.