பிரதமர் அலுவல ஊழியர்களுக்கு இடமாற்றம்!

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊ​ழியர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அலரி மாளிகையில் கடமையாற்றி வந்த பெரும்பாலான ஊ​ழியர்கள், அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சாரதிகள் இருவரும், புள்ளிவிபரவியல்  திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரெனவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.