பல்கலைக்கழக மாணவர்கள் ரணிலுக்கு ஆதரவாக எதிர்ப்புப் போராட்டத்தில்!

 நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமையினை தொடர்ந்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம் செய்யப்பட்டமை ஜனநாயக விரோத செயல் என தெரிவித்து பேராட்டம் நடாத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் எனவும், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கையொப்பமிட்டு இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதித் தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #india #Delhi #university #North Aisa
Powered by Blogger.