உங்கள் முறையிடுங்களை தீர்த்து வைக்கத் தயாராகின்றாராம் டக்ளஸ்??

எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க தன்னிடம் வரலாம் என்றும் அவற்றைத் தீர்த்து வைக்கத் தயார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சில் இன்று (புதன்கிழமை) கடமைகளை ஆரம்பித்தார்.

தனது கடமைகளைப் பெறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகையில், ”கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றப்படாததன் காரணமாக மீண்டும் ஒருமுறை எனக்கு இந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களை ஏமாற்றத்திற்கு அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாக்காமல், உரிய நேரத்தில் உரிய சேவையை வழங்க வேண்டும்.

மக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்கும்போது உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின், அவ்வாறான எல்லாப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு முன்வருவேன்.

நாட்டு மக்களுக்கு அல்லும்பகலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஒருவன் என்ற வகையில் உங்கள் அனைவருக்கும் இருக்கின்ற புதிய கருத்துக்களையும், நிலவுகின்ற பிரச்சினைகளையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னிடம் முன்வைக்கலாம்.

அவற்றினைத் தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் என்ற வகையில் நான் தயாராகவே இருக்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #jafffna #Dakilas 

No comments

Powered by Blogger.