கனடாவை எச்சரித்த சீனா!

கனடாவில் வாழும் தமது பிரஜைகளை கஞ்சா பயன்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது.


கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அண்மையில் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்மையில் கனடா வெளியிடப்பட்டது.

உலகிலேயே முதன்முதலாக கஞ்சாவை வியாபாரமயமாக்கியுள்ள நாடாக கனடா விளங்குகிறது.

பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்டபூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கஞ்சா பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே சீனா அரசாங்கம் அங்கு வாழும் சீன பிரஜைகளுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, கனடாவில் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களும் அதிகம் வாழுகின்றனர். இந்நிலையில் புதிய சட்டத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்து இளைஞர், யுவதிகள் பாதிப்படையக் கூடிய அபாய நிலை உள்ளதாக தமிழ் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணம் உட்பட பல தமிழர்கள் வாழும் பகுதியில் போதைப்பொருள் காரணமாக பல்வேறு குற்றச்செயல்கள் தீவிரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.