ஐ.நாவின் அமைதிகாக்கும் படையை உதவிகோறும் ரனில்!

புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
#New Prime Minister #Vasudeva Nanayakkara #Ranil Wickremesinghe #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.