அனந்தியின் புதிய கட்சியால் வடக்கு மாகாண சபையில் பாரிய குழப்பம்!

வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.


யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இக் கட்சி அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இக் கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயற்பட்டுள்ளார். மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் அனந்தி சசிதரனால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அனந்தியின் இந்த திடீர் முடிவினால் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது,
அத்துடன் பலர் அனந்தியின் கட்சியில் இணையலாம் என்று சந்தேகிப்பதால் நாளை தமிழரசுக் கட்சி தனது முக்கியஸ்தர்களை  அழைத்து ரகசிய சந்திப்பு நடத்தலாம் என உள் வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.