எங்­கள் தமிழ்த் தலை­வர்­கள் மேடைப் பேச்­சு சரி மக்களுக்கு அல்ல!

சிங்­கள மக்­கள் தமது இனத்­தைக் காப்­ப­தற்­காக திட்­டங்­களை வகுத்­துச் செயற்­பட்ட போது எமது அர­சி­யல் தலை­வர்­கள் மேடைப் பேச்­சா­ளர்­க­ளாக மேடை­க­ளில் வீர முழக்­கங்­களை முழங்­கி­விட்டு வீட்­டுக்­குச் சென்று நித்­தி­ரை­யில் ஆழ்ந்­தது தான் எமது சரித்­தி­ரம். சுற்றி என்ன நடக்­கின்­றது என்­பதை அறி­யாத அப்­பா­வி­க­ளாக இருந்­தார்­கள்.


இன்­றும் இருந்து வரு­கின்­றார்­கள். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்த் தேசி­யப் பசுமை இயக்­கத்­தின் ஏற்­பாட்­டில் முன்­னெ­டுக்­கப்­ப­டும், சூழல் அர­சி­ய­லும் நில அப­க­ரிப்­பும் போரின் பச்சை முகம் என்ற தொனிப் பொரு­ளி­லான உரை அரங்கு, யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி சபா­லிங்­கம் அரங்­கில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இங்கு முதன்மை விருந்­தி­னர் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
சிங்­கள அர­சி­யல் தலை­மை­கள் வட­கி­ழக்­கைத் தம்­வ­சம்­ப­டுத்­தும் பல திட்­டங்­க­ளைத் தீட்­டி­யுள்­ளார்­கள். அதே சந்­தர்ப்­பத்­தில் இதற்­குச் சமாந்­த­ர­மாக சந்­தடி எது­வு­மின்றி அந்த அர­சி­யல் முன்­னெ­டுப்­புக்­களை நிறை­வேற்­று­கின்ற குழுக்­க­ளாக வேறு குழுக்­கள் இயங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

உதா­ர­ண­மாக ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன அரச தலை­வ­ராக வீற்­றி­ருந்த காலத்­தில் உள்­நாட்­டுப் போர் வலுப்­பெற்று எல்­லைப்­பு­றக் கிரா­மங்­க­ளில் இனங்­க­ளுக்­கி­டையே போர் நடை­பெற்ற காலத்­தில் ஜே.ஆரின் மக­னா­ன­ரவி ஜெய­வர்த்­தன இந்த நிறை­வேற்­றுக் குழு­வொன்­றிற்­குத் தலைமை தாங்­கி­னார்.

வவு­னி­யா­விற்கு அப்­பால் உள்ள பம்­பை­மடு, ஈரற்­பெ­ரிய குளம் போன்ற பகு­தி­க­ளில் தென்­ப­கு­தி­யில் இருந்து சிங்­கள மக்­களை கொண்­டு­வந்து குடி­யேற்­றி­யது மட்­டு­மன்றி அவர்­க­ளுக்கு துப்­பாக்­கிச் சுடும் பயிற்சி மற்­றும் இன்­னோ­ரன்ன இரா­ணு­வப் பயிற்­சி­களை வழங்கி அவர்­களை அங்கு குடி­யேற்­றி­னார்.

ரவி ஜெய­வர்த்­தன அர­சி­யல் மேடை­க­ளில் காட்­சி­ய­ளிக்­காத போதும் இந்த நிறை­வேற்று கட­மை­களை திறம்­பட ஆற்­றி­னார். எனக்கு மூத்­த­வ­ராக என் கல்­லூ­ரி­யில் கற்ற அவர் ‘ரைஃபிள் க்ளப்’ என்ற எமது சங்­கம் ஒன்­றில் சேர்ந்து சூட்­டுப் பயிற்சி பெற்று மாண­வ­னாக இருந்த காலத்­தில் துப்­பாக்கி சுடு­வ­தில் பத்­துக்­குப் பத்து என்ற கணக்­கில் இலக்­கு­களை சுட்டு வீழ்த்­தக் கூடி­ய­வ­ராக இருந்­தார் என்று குறிப்­பிட்ட முத­ல­மைச்­சர், இலங்­கை­யின் தமிழ்ப் பகு­தி­க­ளில் சிங்­கள அர­சு­க­ளி­னால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த இன அழிப்பு அல்­லது இனச் சுத்­தி­க­ரிப்­புப் பற்றி உலக நாடு­கள் பல­வும் அறிந்­தி­ருக்­கின்­றன.

ஆனால் தற்­போது எது­வித ஆர­வா­ரங்­க­ளு­மின்றி துப்­பாக்கி முழக்­கங்­கள் இன்றி, குருதி சிந்­தா­மல், பச்­சைப் போர் என்ற பெய­ரால் எமது தமிழ்ப் பிர­தே­சங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கு சூழல் அர­சி­யல் என்ற மாயைச் சொல்லை பயன்­ப­டுத்தி உலக நாடு­களை நம்­பச் செய்­கின்ற கன­கச்­சி­த­மான செயற்­பா­டு­கள் இன்று நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன – என்­றார். 

No comments

Powered by Blogger.