டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்திய ரெலே!

நேற்றைய தினம் காலமான டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யுத்தகாலங்களில் கிளிநொச்சி மக்களுக்கு 1997 ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை மாவட்ட வைத்திய அதிகாரியாக டாக்டர் மயிலேறும் பெருமாள் மக்களுக்கு சேவையாற்றியிருந்தார்.

நீண்டகாலமாக வல்வெட்டித்துறையிலும் பருத்தித்துறையிலும் வைத்தயராக சேவையாற்றியுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை யுத்தத்தின் பின்னர் இறுதிவரை பராமரித்து மருத்துவ சேவையினையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


#டாக்டர் மயிலேறு பெருமாள் #செல்வம் அடைக்கலநாதன்  #கிளிநொச்சி  #வல்வெட்டித்துறை  # பருத்தித்துறை #jaffna 
#tamilnews

No comments

Powered by Blogger.