யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை நகையை கொள்ளடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீசாலை புத்தூர்ச்சந்தி பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நள்ளிரவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டின் ஜன்னல் ஊடாக வாள்களை காட்டி கதவைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு குறித்த கும்பல் உள்நுழைந்துள்ளது.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#jaffna    #tamilnnews  

No comments

Powered by Blogger.