தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழும் இளைஞன்!

மாத்தளை மாவட்டத்தில் கலேவல - இப்பன்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதான இளைஞனொருவர் தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழ்ந்து வருகின்றமை தொடர்பாக தகவல் வெளியாகியுளள்ளது.

கலேவல பிரதேசத்தில் வசிக்கும் இந்த சகோதரனும், சகோதரியும் ஊனமுற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்து ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுவதால், இருவரும் அருகில் இருக்க முடியாது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த இருவரின் பெற்றோர் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் மூத்த மகனுக்கு தப்போது 29 வயதாகிய நிலையில், அவர் பிறப்பிலிருந்து ஒரு ஊனமுற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பெற்றோருக்கு இரண்டாவதாக மகள் பிறந்துள்ளார். அந்த மகளுக்கு தப்போது 17 வயது எனவும், அவளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இரண்டு பிள்ளைகள் தொடர்பாக தாய் கருத்துத் தெரிவிக்கையில்,

இரண்டு பிள்ளைகளையும் இளம் வயதிலேயே என்னுடைய கணவரிடம் விட்டு வெளிநாடு சென்றேன். இரண்ட வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் தொழில் செய்து உழைத்த பணத்திலே வீடு கட்டினேன் என குறிப்பிட்டுள்ளார்.

இப்போது, ஊனமுற்ற தங்களின் இரு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக இருவரும் நிறைய வேலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வைக்க முடியாது. சில நேரங்களில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்க முடியாது போகும்.

மகள் தன் சகோதரருடன் எப்போதும் கோபமாக இருக்கிறார். தனது சகோதரனைப் பார்க்க அவள் விரும்பவில்லை.

இந்த நிலையில், வீட்டுக்கு பின்னால் உள்ள தங்களின் கோழிக்கூட்டில் பாதிக்கப்பட்ட தனது மகளை தங்க வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளையும் பராமரிப்பது கஸ்டம் என தெரிவிததுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.