69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தின் அணிவகுப்பு

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அணிவகுப்பு நிகழ்வு ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மன்னார் வீதியில் பட்டானிச்சூர் பகுதியில் இன்று காலை ஆரம்பமான இராணுவத்தின் அணிவகுப்பானது மன்னார் வீதி ஊடாக கண்டி வீதியை அடைந்து நகரின் ஊடாக மூன்று முறிப்பு சந்தியில் இராணுவ தலைமையகம் முன்றலில் நிறைவடைந்துள்ளது.

இந்த அணிவகுப்பு நிகழ்வில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸார் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


#srilanka army #vavuniya   #அணிவகுப்பு  #மன்னார் #வவுனியா # மேஜர் ஜெனரல் குமுது பெரேரா  #இராணுவ அதிகாரிகள், #இராணுவத்தினர், #பொலிஸார்

No comments

Powered by Blogger.