புலம்பெயா் தமிழா்களை நாடு திரும்ப கோரி பயணமானாா்-ஆளுநா் றெஜினோல்ட் கூரே!

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் அவரது செயலாளர் இளங்கோவன ஆகியோர் புலம்பெயர் தமிழர்களின் அழைப்பின் பெயரில் 5 நாடுகளிற்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

லண்டன்ல, சுவிஸ் , ஜேர்மனி , பிரான்ஸ் உள்ளிட்ட 5 நாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆளுநரைத் தொடர்பு கொண்டு நேரில் வருகைதந்து வடக்கில் முன்டெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்தனர்.



அத்துடன் போருக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை வடக்கு மாகாண சபை முன்னெடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் குறித்த பணியை தவற விட்ட காரணத்தினால் மேற்படி திட்டங்களை

ஆளுநர் ஊடாக முன்னெடுக்க விரும்புவதாக கடந்த மாதம் ஓர் குழுவினர் நேரில் வருகை தந்து ஆளுநரிடம் தெரிவித்திருந்தனர். இதன் பிரகாரம் குறித்த புலம்பெயர் நாட்டவர்களை நேரில் சந்தித்து வடக்கு மாகாணத்தில் முதலிடக்கூடிய திட்டங்கள் ,

மக்களிற்கு உடனடியாக நன்மை பயக்க கூடிய திட்டங்கள்ல, அவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் சமயம் அரசின் நிலைப்பாடுகள் , அவற்றிற்கான அனுமதிகள் தொடர்பில் நேரில் எடுத்தியம்பும் நோக்கில் மேற்படி சுற்றுப் பயணம் அமைந்துள்ளது.

குறித்த சுற்றுப் பயணத்திற்காக நேற்றைய தினம் முதலில் லண்டன் புறப்பட்ட குழுவினர் அங்கிருந்து சுவிஸ் மற்றும் பிரான்ஙஸ் , ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் உள்ள புலம்பெயர் உறவுகளைச் சந்தித்து



பெரும் மூதலீட்டார்களை வடக்கிற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நேற்றைய தினம் பயணமான குழுவினர் மேற்படி பணிகளை நிறைவு செய்து எதிர்வரும் 18ம் திகதியே நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மேற்படி பயணம் கடந்த வாரம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் இவர்களிற்கான நுழைவு விசா அனுமதி பெறுவதில்  தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.