ஐ.நாவுக்குரிய அமெரிக்கத்தூதர் திடீர் பதவிவிலகல் டொனால்ட்ரம்ப்புக்கு நிக்கி ஹாலேயின் அதிர்ச்சி

ஐக்கிய நாடுகள் சபைக்குரியஅமெரிக்கத்தூதர் நிக்கிஹாலே இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். சற்றும் எதிர்பார்க்கமுடியாத ஒரு நகர்வாக இந்த பதவிவிலகல் நகர்வு இடம்பெற்றுள்ளது.

நிக்கிஹாலேயின் பதவிவிலகலைஅமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப் ஏற்றுக்கொண்டதாகசெய்திகள் தெரிவித்துள்ள போதிலும் வெள்ளை மாளிகை இதனை உறுதிப்படுத்தவில்லை.

தென் கரோலினாவின் முன்னாள்ஆளுனரான நிக்கி ஹாலே 2017 ஜனவரியில் ஐ.நாவுக்குரிய அமெரிக்கத்தூதராக நியமிக்கப்பட்டார்.

கடந்த யூன்மாதம் ஐ.நா. மனிதஉரிமைப்பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியபோது நிக்கி ஹேலே மனித உரிமைபேரவையை காரசாரமாகவிமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.