எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான்!!

**பரனி கிருஸ்னரஜனி**
அனுராதபுரத்தில் "புலிகளுக்கு என்ன வேலை?" என்று மாணவர்களைச் சிங்களவர்கள் கேலி செய்ததாக தெரிய வருகிறது.

அது எல்லாளன் மண் என்ற பண்டைய வரலாறு ஒரு புறம் இருக்க "புலி" கருத்தரித்ததே அந்த மண்ணில்தான் என்பதை மறந்து விட்டார்கள் போலும்.
தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான். பிறந்த மருத்துவமனை என்று பார்த்தால் அது இணுவில்.
ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில்.
கருவுற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம்.


அங்கு வருகிற சிங்களப்பெண்கள் “என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?” என்று பகிடியாகக் கதைப்பார்களாம்.

இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் “இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது.


கருத்தரித்த இந்த பெண் இந்த இடத்தில் இருக்ககூடாது” என்று பார்வதியம்மா அங்கு செல்வதை தடுத்தார்களாம். பின்பு நடந்தது உலகறிந்த வரலாறு.
இனி "அனுரதபுரத்தில் தமிழர்களுக்கு என்ன வேலை? " என்று எந்த சிங்களவன் கேட்டாலும் இதைச் சொல்லிப் போட்டு வாருங்கள்.

No comments

Powered by Blogger.