தமிழக பேராசிரியர்கள் தமிழத்தேசிய மக்கள் முன்னணியுடன் சந்திப்பு!

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த தமிழக பேராசிரியர்கள் தமிழத்தேசிய மக்கள் முன்னணியுடன் ஓர் வரலாற்று முக்கித்துவமிக்க சந்திப்பை நேற்று (14.10.2018) மேற்கொண்டனர்.
இச்சந்திப்பின்போது கிழக்கின் நிலைமை தொடர்பாக குறிப்பாக தமிழரின்நிலை அவர்களின் இருப்பிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் இதுவரைகாலமும் நடைபெற்ற இனப்படுகொலைகள்
நடந்துகொண்டிருக்கின்ற இனப்படுகொலைகள்
சிறைக்கைதிகள்
திட்டமிட்ட குடியேற்றங்கள்
காணமற்போனோர் பற்றியும் அதன் அலுவலகம் பற்றியும்
2004 இற்கு பின்னர் கருணா பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள்
அரச படைகளுடன் சேர்ந்து மேற்கொண்டகடத்தல்கள் 
தொடர்பாகவும்
தமிழக சட்டசபையில் எடுகக்கப்படும்
ஈழத்தமிழர் தொடர்பான தீர்மானங்கள் பாராளூமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை முன்வைத்தோம்
நிகழ்வின் ஆரம்பத்தில் இதுவரை காலமும் தழகத்தில் ஈழத்தமிழருக்காக உயிர்நீர்த்த 18 மாவீரர்கள் உள்ளடங்களாக மாவீரர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட நேரம் மௌன ஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பேராசியர்களான இராமு மணிவண்ணன் வழக்கறிஞர் கென்றிதிபேன் அசேந்திரன் குழந்தைசாமி
இராணி செந்தாமரை பாண்டிமாதேவி ஆகியோரும் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் செயலாளர் குழந்தைவேல் ஜகநீதன் உட்பட பலர்கலந்து கொண்டனர். சுமார் 2மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Powered by Blogger.