சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரி இன்று  மஸ்கெலியா பிரவுண்லோ, சீட்டன், லக்கம் ஆகிய மூன்று தோட்டங்களை சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மஸ்கெலியா பிரவுண்லோ மற்றும் லக்கம் ஆகிய பகுதிகளில் இவ் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காமல் சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு இன்றி வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகளும் மந்த போஷனத்தினால் பாதிக்கப்பட்டு வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மலையகத்தில் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

#தோட்ட_தொழிலாளர்  # மஸ்கெலியா   #சீட்டன் #லக்கம் #பிரவுண்லோ
Powered by Blogger.