அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்கள் நியமனம் தொடர்பில் இறுதி தீர்மானம் கிடைக்கவில்லை

அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரினால் பெயரிடப்பட்ட 5 உறுப்பினர்கள் மற்றும் சிறு கட்சிகள், ஏனைய குழுக்களினால் பெயரிடப்படவேண்டிய உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானமே இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த பெயர் விபரங்களை ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# அரசியலமைப்பு  #கரு_ஜயசூரிய  #karujayasuriya  #srilanka #parliment  #tamilnews

No comments

Powered by Blogger.