மியன்மாரில்ஆகாயப்படை விமான விபத்தில் இரண்டு விமானிகள் மரணம்!

மியன்மாரில் கடுமையான பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த இரு வேறு ஆகாயப்படை விமான விபத்துகளில் இரண்டு போர் விமானிகள் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு விமானத்தின் சிதைவுகளால் அடிபட்டு தரையில் இருந்த சிறுமி ஒருவரும் மாண்டார்.

கடுமையான பனிமூட்டத்தின் காரணமாக யங்கூனுக்கு 500 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள ஆகாயப்படைத் தளத்துக்கு அருகே தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது F-7 போர் விமானம் மோதியது.

சம்பவத்தில் விமானி மாண்டதாக ஆகாயப்படை அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கோபுரத்துக்கு அருகில் இருந்த ஒரு வீட்டில் படித்துக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுமி விமானச் சிதைவுகளால் காயம்பட்டார்.

பின்னர் அந்தச் சிறுமி மருத்துவமனையில் மாண்டார்.

அந்த இடத்துக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு விமான விபத்து.

விமானம் கீழே விழுவதற்கு முன் விமானி அதிலிருந்து வெளியேறினார்.

ஆனால் தரையில் மோதி அவர் உயிரிழந்தார்.

மாண்ட இரு விமானிகளும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.   

No comments

Powered by Blogger.