சிங்கப்பூருடன் வர்த்தக, முதலீட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையம் ஏற்பாடு

சிங்கப்பூருடன் வர்த்தக, முதலீட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட, ஐரோப்பிய ஆணையம், அதன் மன்றத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் - சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம் - சிங்கப்பூர் முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியனவும் அந்த உடன்பாடுகளில் அடங்கும்.

ஆசியான் உறுப்பு நாட்டிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தாகும் முதல் இருதரப்பு வர்த்தக, முதலீட்டு ஒப்பந்தங்களாக அவை அமையும்.

அடுத்த ஆண்டிலிருந்து ஒப்பந்தம் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள், சேவை வழங்குவோர், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகளை வழங்கக்கூடும்.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் முக்கியமான இடத்தில் உள்ள சிங்கப்பூர், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சிறந்த நுழைவாயிலாக இருக்கும் என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.