அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி முன்னெடுப்பு!

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி மாவீரர் குடும்ப பெற்றோர்களினால் இன்று 05 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இப்பணியானது அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல மீள்நிர்மாணிப்பு குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் மக்கள் நலன் காப்பகத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவீரர் குடும்பத்தின் பெற்றோர்கள் இன்று நாம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இச்சிரமதானப் பணியினை மேற்கொள்கின்றோம் அந்தவகையில் கடந்த வருடம் ஓரளவேனும் கார்த்திகை 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வினை நடாத்திமுடித்திருந்தோம் அதன்பிரகாரம் எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் மிகச்சிறப்பாக நினைவுகூறுவதற்கு சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யவுள்ளோம்.
அத்துடன் கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசத்தில் மாத்திரமே நினைவு கூறப்பட்டது ஆனால் சென்ற வருடத்திலிருந்து வட கிழக்கிலும் நினைவு கூற சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது அதனால் புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம் என கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.