சென்.லெனாட்ஸ் மாணவியின் வரலாற்று சாதனையை எவரும் கண்டுகொள்ள வில்லையா?

இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இராகலை சென்.லெனாட்ஸ் தோட்டத்தை சேர்ந்த திரு.திருமதி செபஸ்டியன் லுஸ்டினா மேரி தம்பதிகளின் செல்வ புதல்வி நிலுக்ஷினி விக்டோரியா 196 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் வலப்பனை வலயத்திற்குட்பட்ட சென்.லெனாட்ஸ் த.ம.வி. மாணவியாவார். இவரின் வெற்றிக்கு உழைத்த பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இதுவரையும் இவரை எந்தவொரு ஊடகமும் கண்டுகொள்ளவில்லையென மலைநாடு இணையத்துக்கு முறைப்பாடொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
196 புள்ளிகளைப் பெற்ற பசிந்து பாஷித்த ரணசிங்கவை கண்டுகொண்ட எமது ஊடகங்கள் ஏன் இந்த மாணவியின் சாதனையை கண்டுகொள்ளவில்லை?
எம்மவருக்கும் மார்தட்டி கொடுப்போம்.

தீலிபன் கந்தப்பிள்ளை

No comments

Powered by Blogger.