மைத்திரியின் பேச்சை நம்ப முடியாது- பிரசன்ன ரணதுங்க எம்.பி.!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து அரசு அமைக்க வேண்­டும் என்று முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோசனை தொடர்­பில் மிக­வும் கவ­ன­மாக ஆராய்ந்து பார்க்க வேண்­டும்.
கூட்டு எதிர்க்­கட்சி இப்­ப­டி­யான தீர்­மா­னம் ஒன்றை எடுக்­கும் போது மக்­க­ளின் கருத்தை அறிய வேண்­டும் என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிர­சன்ன ரண­துங்க தெரி­வித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
தற்­போது காணப்­ப­டும் நிலை­மைக்கு அமைய உட­ன­டி­யாக தேர்­தல் ஒன்றே நடத்­தப்­பட வேண்­டும். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் போதும், இதே யோச­னையை அவர்­கள் முன்­வைத்­த­ னர்.
தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்டு வரு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­னார் என்று தெரி­வித்துக் கொண்டு வந்­த­னர். இறுதி நேரத்­தில் அரச தலை­வர் அதைக் கைவிட்­டார்.
இந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் தின் பின்­னால் ஓடி­ய­தால், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் பெற்ற வெற்­றியை எம்­மால் அனு­ப­விக்க முடி­யாது போனது. பிள­வு­பட்­டி­ருந்த ஐக்­கிய தேசி­யக் கட்சி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் ஐக்­கி­ய­மா­னது.
கூட்டு எதிர்க்­கட்­சியை ஏமாற்ற, அரசு அமைக்­கும் யோசனை முன்­வைக் கப்­ப­டு­கின்­றதா என்ற சந்­தே­க­மும் எமக்­குள்­ளது. என்ன செய்­கின்­றார்­கள் என்று பார்ப்­போம்.
நாட்­டுக்­காக எடுக்­கப்­ப­டும் சிறந்த தீர்­மா­னங்­களை கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரிக்­கும். மக்­க­ளின் கருத்­தை­யும் அறிய வேண்­டும்.
நாட்டை அழித்த ரணில் – மைத்­திரி இரு­வ­ரில் ஒரு­வ­ரு­டன் இணை­வ­தை­யும் மக்­கள் விரும்ப மாட்­டார்­கள். தேர்­த­லுக்கு சென்று அர­சைக் கலைக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாங்­கள் இருந்­தோம். நாட்­டின் நிலை­மையை பார்க்­கும் போது, இந்த அரசை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் மக்­கள் இருக்­கின்­ற­னர்.
ரணில் – மைத்­திரி வில­கு­வது இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வா­காது. அப்­ப­டி­யா­னால் தேர்­த­லுக்கு செல்ல வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் இணை­வது என்­பதைக் கூட்டு எதிர்க்­கட்சி சிந்­தித்து பார்க்க வேண்­டிய ஒன்று.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது எப்­படி நம்­பிக்கை வைப்­பது. கடந்த பொதுத் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச வெற்றி பெற்­றா­லும் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்க மாட்­டேன் என்று மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­னார்.
கூட்டு எதிர்க்­கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யும் இணைந்து அமைக்­கும் அர­சில் யார் தலைமை அமைச்­சர் என்­பன போன்ற விட­யங்­கள் பற்­றி­யும் பேச­வேண்­டி­யுள்­ளது -– என்­றார்.

No comments

Powered by Blogger.