நிலஅபகரிப்பு தொடர்பில் ஐ.நா அதிகாரிகள் உறுதி!

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும், ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மகாவலி திட்டம் தொடர்பாகவும், தொல்பொருள், வனவளம், வனரீவராசிகள் போன்ற திணைக்களங்களின், அதிகார சபைகளின் நில அபகரிப்பு தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக குறித்த அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.