காசல் ரீ நீர் தேக்கத்தில் குவிந்து காணப்பட்ட குப்பைகள் அகற்றபட்டன!


மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக காசல் ரீ நீர் தேக்கத்தில் குவிந்து காணப்பட்ட குப்பைகள் இன்று  அகற்றபட்டன.

காசல்ரீ நீர்தேக்கத்தில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை நோர்வுட் பொலிஸார்,  இராணுவப்படையினர் ஆகியோர் இணைந்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 10மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிவரை ஈடுபட்டனர்.

குறித்த வேலைத்திட்டத்தில் நோர்வுட் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.