சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் திட்டம் போட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் பலரும் கலந்துக் கொண்டு வெளியிட்டனர். தற்போது இந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு விஜய் ரசிகர்கள் புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளனர். அதாவது ‘சர்கார்’ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களும், 1 மில்லியன் லைக்ஸும் பெற வைப்பதற்கான திட்டம் போட்டுள்ளனர். அப்படி நடந்தால், எந்த படத்திற்கு எந்த நடிகருக்கும் யூடியூப்பில் கிடைக்காத சாதனையாக கொண்டாடப்பட இருக்கிறது.

#Sarkar #Vijay #Thalapathy Vijay #AR Murugadoss #Keerthy Suresh #சர்கார் #விஜய் #தளபதி #விஜய் #ஏஆர் #முருகதாஸ் #கீர்த்தி #சுரேஷ் #சர்கார் #டீசர்


Powered by Blogger.