இணையத்தில் மோட்டோ ஜி7 வீடியோ!

மோட்டோ ஜி6 சீரிஸ் இந்தியாவில் வெளியான நிலையில், அடுத்து மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ் மற்றும் ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள் வெளியான நிலையில் ஸ்மார்ட்போனின் வீடியோ லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே வெளியான விவரங்களை பொருத்த வரை புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு கொண்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


#Motorola #Moto #G7 #மோட்டோரோலா #மோட்டோ #ஜி7

No comments

Powered by Blogger.