இ.போ.ச வாகனத்தில் மதுபானம்.!

அனுமதிப் பத்திரம் இன்றி வெளிநாட்டு வகை மதுபானங்கள் 23 போத்தலை இ.போ.சபைக்குச் சொந்தமான சாரதி பயிற்சிக் கல்லூரி வாகனத்தில் எடுத்துச் சென்ற 5 ஊழியர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்ட வகையில் தீர்ப்பிற்காக நவம்பர் 7ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து வருகை தந்த இ.போ.சபையின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த வாகனத்தில் கொக்குவில் பகுதியில் பயணித்த சமயம் மதுவரித் திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த வாகனம் சோதனையிடப்பட்ட சமயம் வெளிநாட்டு வகையிலான 23 போத்தல் மதுபானம் கைப்பற்றப்பட்டிருந்தது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 8 ஆயிரத்து 900 ரூபா என்ற வகையில் மோத்தப் பெறுமதியா 2 லட்சத்து 4 ஆயிரத்து 700 ரூபா மதுபானம் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்களிற்கான உரிய சிட்டைகளோ எடுத்துச் செல்வதற்கான அனும்மியோ இன்றி சட்டத்திற்கு முரணாக கொண்டு சென்ற

குற்றச் நாட்டின் பெயரில் இ.போ.சபையின் ஐந்து ஊழியர்களிற்கும் எதிராக மதுவரித் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கில் ஐவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதன் பிரகாரம் ஐவரையும் தலா 60 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான்

குறித்த வழக்கின் தீர்ப்பிற்காக எதிர் வரும் நவம்பர் 7ம் திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார். 

No comments

Powered by Blogger.