விடுதலைப்போராட்ட ஆதரவாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்!

நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.
நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றிய இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகி விட்டார்.

உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் அவர் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிருந்தார்.முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல போராட்ட வாழ்வியலை மையப்படுத்தி நூல்களை எழுதியுமிருந்தார்.நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.