மைத்திரி, கோட்டா கொலை முயற்சி – 89 பேரிடம் வாக்குமூலம் பதிவு!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொலை சதித் திட்டம் தொடர்பில் 89 பேரிடம் வாக்குமுலம் பெறப்பட்டுள்ளது.


அத்துடன் இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)  பிற்பகல் இடம்பெற்ற ஊடக ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவர்கள் இருவருடன் சேர்த்து 47 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குறித்த 89 பேரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமுலம் பெற்றுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

#kothabaya   #maithiri #colombo  #srisena #srilanka #ruvan kunasegara #tamilnews #tamilarul.net #tamil   #news
Powered by Blogger.