ஞானசார தேரரின் விடுதலைக்காக ஜனாதிபதி நடவடிக்கை!

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் கோரிக்கையொன்றை முன்வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக அவ்வமைப்பின் உறுப்பினரும் சிங்கள ராவைய அமைப்பின் பொதுச் செயலாளருமான மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான இறுதி மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள குறித்த சந்திப்பின்போது, ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம்  நேற்று நிராகரித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசாரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டணை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#பொதுபல சேனா  #அத்தே ஞானசார தேரரை  #சிங்கள ராவைய   #ஜனாதிபதி  #colombo  #ganathara 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.