முல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளமை காரணமாக குளத்தினை நம்பி நன்நீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

இதன்காரணமாக குளத்தினை நம்பியுள்ள 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொருளாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினந்தோறும் நூறு கிலோவிற்கும் மேற்பட்ட நன்னீர் மீன்கள் இந்த குளத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், எனினும் தற்போது குளத்தில் நீர் வற்றியுள்ளமை காரணமாக தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.