என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்!

மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
டி.வி.யி லிருந்து மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரியா பவானிசங்கர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சமீபத்தில் அவர் நடித்திருந்தார்.

சினிமாவுக்கு வரும் முன்னரே ரசிகர்களை சம்பாதித்த பிரியாவுக்கு சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அதிகம். ரசிகர்களை போலவே பிரியா பெயரில் இயங்கும் போலி ட்விட்டர்,
முகநூல் பக்கங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கவே சுதாரித்துக் கொண்ட பிரியா இதற்கு முடிவுகட்ட களத்தில் இறங்கினார்.
இதற்காக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது உண்மையான டுவிட்டர் கணக்கு எது என தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

#Priya #Bhavani #Shankar  #பிரியா #பவானி #சங்கர்

No comments

Powered by Blogger.