ஜானுவும் ராமுவும் நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்களா?

96  படத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கரை தான் காதலிப்பதாக வெளியான செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கௌரி விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , த்ரிஷா நடித்துள்ள படம் 96. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். அதேபோல் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் கௌரி நடித்துள்ளார்.

 வதந்தி குறித்து 96 படம் நடிகை கௌரி விளக்கம் :
படத்தைப் பார்த்தவர்கள் த்ரிஷா, விஜய் சேதுபதியை பாராட்டுவது போல், ஆதித்யா பாஸ்கர், கௌரியையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆதித்யா பாஸ்கர் கௌரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர் ஐ லவ் யூ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி, இருவரும் நிஜக் காதலர்களாகிவிட்டார்கள் என்று செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கௌரி, “ஆதித்யா பாஸ்கரும், நானும் காதலிக்கவில்லை. ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் திரையில் மட்டுமே காதலர்களாக நடித்தோம். நிஜத்தில் அல்ல. தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்தி கண்ணியம் காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.

Powered by Blogger.