பிரபல நடிகரின் மனைவிக்கு மூக்கை அடித்து உடைத்த 2வது மனைவி வாரிசுகள்!

நடிகர் மன்சூர் அலிகான் 2வது மற்றும் 3வது மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2வது மனைவியின் குழந்தைகள் 3வது மனைவியின் மூக்கை அடித்து உடைத்தனர். இதில் 3வது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன்களில் ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தான். சமீபத்தில் வெளியான குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் போன்றவற்றிலும் தனது நடிப்பின் தனித்துவத்தை வெளிபடுத்தியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் மனைவிகளுக்கு இடையே தகராறு :
மேலும் சமீபகாத்தில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து கைதானவர்களில் இவரும் ஒருவர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவரது 2வது மனைவிக்கும் 3வது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

அந்த தகராறில், 2வது மனைவி ஹமிதா மகள் மற்றும் மகன் ஒரு இரும்பு கம்பியை கொண்டு 3வது மனைவி வாகிதாவை தாக்கினர். இதில் 3வது மனைவி வாகிதாக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது.

தற்போது வாகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

No comments

Powered by Blogger.