பேர்லின் அம்மா உணவகத்தின் அயராத தாயகம் நோக்கிய நற்பணி.

"திலீப உணர்வுக் கரங்கள்" எனும் சிந்தனைக்கு அமைய தாயகத்தில் உள்ள
மாற்றுவலுவுள்ளோர்களுக்கான சுயதொழில் சிறப்பு உதவித்திட்டத்தில் தொடரும் வகையில் சென்ற தினத்தில் கிளிநொச்சியை  வசிப்பிடமாக கொண்ட கடந்த யுத்தம் காரணமாக பாதிப்புற்று வறுமையின் உச்சத்தில் அன்றாட வாழ்வியலுக்காக போராடும் ஒரு குடும்பத்திற்கு மீண்டும் பேர்லின் அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பு திட்டத்திற்கு ஏற்ப அனைத்து விடயங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இச் சிறிய வாழ்வாதார உதவி துன்பத்தில் வாழும் பிள்ளைகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் எனும் நம்பிக்கையை கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.