இந்தி நடிகர் திலிப் குமார் வைத்தியசலையில் அனுமதி!

இந்தி நடிகர் திலிப் குமார், நெஞ்சுவலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தி சினிமா உலகில் சோக கதாபாத்திரங்களில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர், திலிப் குமார். வயது 95. மார்பக நோய்த் தொற்று காரணமான வலியைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 5) அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 1998-ம் ஆண்டே சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட திலிப் குமார், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் கடந்த சில ஆண்டுகளாக குறைத்தார். இன்று நெஞ்சு வலியைத் தொடர்ந்து சிகிச்சைக்கு சேர்ந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

#Dilip #Kumar #hospitalised 
Powered by Blogger.