தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் அதிதி ராவ்!

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்ற அதிதி ராவ் மீண்டும் அவரது இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார்.

அரவிந்த சாமியின் காதலியாக வந்த அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

அதைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து புதிய இருமொழிப் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழைப்போலவே தெலுங்கிலும் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

சம்மோஹனம் படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர் தற்போது தேசியவிருது பெற்ற சங்கல்ப் ரெட்டி இயக்கத்தில் அண்டரிக்‌‌ஷம் படத்தில் நடிக்கிறார். வருண் தேஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். டிசம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வரலாற்றுக் கதைகள், காதல், கிரைம் திரில்லர், சைக்கோ திரில்லர், விண்வெளி தொடர்பான படம் என தொடர்ந்து தான் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகளில் அதிதி வித்தியாசம் காட்டிவருகிறார்.
Powered by Blogger.