ஈழத் தமிழர்களிற்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி என்ன??!

கடந்த திங்கட்கிழமை அன்று தமிழர் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஈழத்தமிழர்கள் ஒலிம்பிக் வாரியத்தில் பிரதி நிதித்துவம் வகிப்பது பற்றிய வேண்டுகோளை முன்வைத்தபோது, இலங்கை இனப்படுகொலை அரசின் தூதுவர் இந்த மாநாட்டை தலைமை தாங்கி நடாத்துவதால் எமது பிரதிநிதியின் உரையை இடைமறித்து நிறுத்திவிட்டார்.
தமிழினவழிப்பின் சாட்சியங்களாக வாழும் பல மில்லியன் தமிழர்களின் சார்பாக சர்வதேச ஒலிம்பிக் வாரியத்தின் ஆணையாளர்களில் ஒருவரான Ms Nawal El Moutawakelவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான அமர்வுகளை தலைமை தாங்குபவர்களால் ஏனையவர்களின் கருத்துகளிற்கு இடமளிப்பதே இவ் அவையின் வழமையாகும்.


ஆனால் இலங்கை அரசின் ஜெனீவாவிற்கான உயர்ஸ்தானிகர் தன்னிலை மறந்து சபை நடைமுறையை மீறிச் செயற்பட்டுள்ளார்.

எனினும், அறிக்கை குறித்த ஒலிம்பிக் வாரிய அதிகாரியிடமும், இவ் அமர்வில் பங்குபற்றிய ஏனைய உறுப்பினர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் இச் செயலிற்கு வருத்தம் தெரிவித்ததுடன், இச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் சபையின் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, நாடுகள் கடந்தும் எமது உரிமைக்கான குரலை தடுப்பதில் இலங்கை இனப்படுகொலை அரசு முனைப்புடன் செயற்படுவதையே இச் சம்பவம் உணர்த்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#United Nations #Sri Lanka  #swiss #Geneva  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.