ரெலோ இயக்கத்தின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக மீண்டும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 10வது தேசிய மாநாடு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

இதனடிப்படையில் நேற்று மாலை தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாக தெரிவு நடைபெற்றுள்ளது.

தலைவராக மீண்டும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டதுடன், பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறிக்காந்தா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொருளாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவுசெய்யப்பட்டதுடன், கட்சியின் தவிசாளராக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய அமைப்பாளராக சுரேன் குருசாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரசார செயலாளராக சொக்கன் கணேசலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நிர்வாக செயலாளராக ப.நித்தியானந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உப தலைவர்களாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரும், கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சி தலைவருமான ஹென்றி மஹேந்திரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதேபோன்று இளைஞரணி தலைவராக வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் துணைத்தலைவராக வேணுராஜ் தெரிவு செய்யப்பட்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.