புதிய அரசியல் முன்னணி ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டி! விக்னேஸ்வரன்!

அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் பேசிய முதலமைச்சர்,

“எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன்.

முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போகின்றேன்.

இந்நிலையில், எமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் புதியவர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#C V Wigneswaran #Colombo  #tamilnews #jaffna

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.