சினிமா பாணியில் யுவதியை கடத்திய காதலன்!

தென்னிலங்கையில் சினிமா பாணியில் இளம் யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அம்பலந்தோட்டை பிரதேசத்தில் 17 வயதான இளம் யுவதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்

17 வயதான எம்.பி. நிபுனி வத்ஷானி என்ற யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்துடன் காதலன் நேரடி தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை அந்த யுவதியின் வீட்டிற்கு சென்ற 6 பேர் கொண்ட குழுவினர் துப்பாக்கியை காட்டி யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

யுவதியின் காதலன் உட்பட 5 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.