சட்டவிரோதமாக மதுபானம் விற்றவா்கள் கைது!

யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்ற நபர்களை யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைந்து பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மதுவொழிப்பு தினமான இன்றைய தினம் புதன் கிழமை மதுபான சாலைகள் மூடபப்ட்டு உள்ளன. இந்நிலையில் , யாழ்.சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களான வை.கிருபாகரன் , ஜெ. ரஜிவ்காந், ஜெனன் மற்றும் ம.மயூரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை அடுத்து உறுப்பினர்கள், சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்க படுவதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது மாநகர சபையின் வரி அறவிட்டு உத்தியோகஸ்தர்களும் உடன் இருந்துள்ளனர்.

அதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற நபரை பிடித்ததுடன் அவரிடம் இருந்து 250 மில்லி லீட்டர் கொள்வனவு உடைய 13 சாராய போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சாராய போத்தல்களையும்  பிடிபட்ட நபரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Powered by Blogger.