மட்டக்களப்பில் நியாயமில்லாத எந்தவொரு காரியமும் இடம்பெற முடியாது!

எமது மாநகர ஆட்சியில் கட்சிகளைப் பார்த்து எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. வட்டாரங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நியாயமில்லாத எந்தவொரு காரியமும் இடம்பெறமுடியாது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 10வது அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது மாநகர ஆட்சியில் கட்சிகளைப் பார்த்து எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை, வட்டாரங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்த வட்டாரத்திற்கு எவ்வாறான செயற்பாடுகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கின்ற விடயம் எதிர்வரும் மாதம் தெரியப்படுத்தப்படும். கட்சி பேதங்கள் அற்ற வகையிலேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

நியாயமில்லாத எந்தவொரு காரியமும் இடம்பெறமுடியாது. வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டே வளப்பங்கீட்டை மேற்கொள்கின்றோம்.

ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்களுக்காகவே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. என்றென்றும் மக்களை சிந்தையில் வைத்தே மாநகர அபிவிருத்திகளைச் செய்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

#Batticaloa     #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.